Home செய்திகள்கீழக்கரை செய்திகள் திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ONGC, வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி-காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் பெரும் அபாயம்..

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ONGC, வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி-காவிரி டெல்டா பாலைவனமாக மாறும் பெரும் அபாயம்..

by ஆசிரியர்

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுமார் 6000-ம் ச.கிமீ பரப்பளவிலான விளை நிலப்பகுதிகளில் வேதாந்தா -274 கிணறுகளுக்கும், ONGC – 67 கிணறுகள் அமைக்க கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசோடு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் 11.04.19 இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்  பெரியகுடி, கீழ்வேலூர், வேதாரண்யம், சீர்காழி,தரங்கம்பாடி, திருமலைராயன்பட்டினம், கோட்டுச்சேரி புவனகிரி, திண்டிவனம், வானூர் உள்ளிட்ட பகுதிகளில் கிணறுகள் அமைத்திட தற்போது மத்திய, மாநில அரசுகளின் சுற்று சூழல் தடை இல்லா சான்று பெறுவதற்க்காக ஆய்வு செய்வதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது.

இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் ஒட்டு மொத்த காவிரி டெல்டா அழிந்து போகும், அதையொட்டியுள்ள வங்க கடல் பகுதி மீன்வளம் அழியும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2013ல் பெரியகுடி கிராமத்தில் அமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து வெளியேறிய கட்டுங்காத வாயு குழாய்களை உடைத்துக் கொண்டு வெளியேறி பேராபத்து ஏற்பட்டது.

இதுவரையில் இந்தியாவில் எங்கும் கிடைக்காத அளவில் அதிக அளவிலான அடர்த்தியுடனான எரிவாயு இப்பகுதிகளில் உள்ளதாகவும், அதனை வெளி கொண்டு வருவதற்கான தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும், அதனால் அக் கிணறுகள் தோண்டும் பணியை தொடர்வதற்கான சுற்றுசூழல் அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டு தமிழக அரசு தடுத்து நிறுத்தியது.

ஆனால் தற்போது அக்கிணறு அமைப்பதற்கான பணிகளை உரிய அனுமதி இன்றி துவங்கியுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு அப்பகுதி மக்களை ஒன்றுபடுத்தி அதனை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 6 மாத காலமாக பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேதாந்தா போன்ற பெருநிறுவனங்களின் உறவை பலப்படுத்திக் கொள்ளும் சுயநல நோக்குடன் மோடி அரசு அவசர அவசரமாக நாசக்கார வேதாந்தாவோடு மறைமுகமாக ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவருகிறது. விவசாயிகள் விழிப்புடன் ஒன்றிணைந்து மோடி அரசிற்கும், அதற்கு துணை போகும் அஇஅதிமுகவிற்கும் எதிராக தேர்தலை சந்திக்க முன்வர வேண்டும்.

இத்திட்டங்களுக்கான அனுமதி ரத்து செய்தும், 0NGC, வேதாந்தா நிறுவனங்களை விரட்டியடிக்கும் வலிமையோடு போராட்டக்களத்திற்கு முன் வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே தற்போதைய தீர்வாக அமையும். இல்லையேல் விவசாயிகள் அழிந்து போவோம் என எச்சரிக்கிறேன் என்றார்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளர்.அப்போது திருவாருர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உடனிருந்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!