Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் மரணம்….

தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் மரணம்….

by ஆசிரியர்

05.04.2019 அன்று இரவு சிவகங்கை மெயின் ரோடு, பாண்டிகோவில் அருகே ரமேஷ் 26/19, த/பெ. சங்கர்சுப்பு, TNHP காலனி,மதுரை என்பவர் TN 63 AL 1861 YAMAHA FZ என்ற இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் சிற்றரசன் 26/19, த/பெ.மார்த்தாண்டம், கட்டானிபட்டி போஸ்ட், சிவகங்கை மாவட்டம் என்பவர் உட்கார்ந்து சென்றுகொண்டிருந்தபோது ரமேஷ் வாகனத்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் சாலையின் நடுவே ஓட்டிச்சென்று எதிரே வந்த அரசு பேருந்தின் முன்பக்கம் மோதி கீழே விழுந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

பேருந்து ஓட்டுனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்கு பதிவு செய்து E3-அண்ணாநகர் காவல்நிலைய ஆய்வாளர் திரு.காட்வின் ஜெகதீஸ்குமார் அவர்கள் இவ்வழக்கை விசாரணை செய்துவருகிறார்.

மதுரை மாநகர பொதுமக்கள் அனைவருக்கும் காவல் ஆணையர் அவர்களின் முக்கிய வேண்டுகோள். இன்றைய சூழலில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. மதுரை மாநகரில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களில் இருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அன்றாடம் நடத்தப்பட்டு வருகின்றன…

*இரு சக்கரம் வாகனத்தில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

*இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையின் இடதுபுறம் மட்டுமே வாகனத்தை ஓட்டிச் செல்ல வேண்டும்.

*இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்தை ஒருபோதும் முந்தி செல்லக்கூடாது.

*சாலைகளின் நடுவே வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் எதிரே வரும் கனரக வாகனங்களால் உயிர்சேதம் மற்றும் கொடுங்காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

*இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் இருவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டவும்.

*இரு சக்கர வாகன ஓட்டிகள் மது அருந்தி விட்டு மற்றும் கைப்பேசி பயன்படுத்திக்கொண்டு வாகனத்தை ஓட்ட கூடாது.

*இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் பக்கவாட்டு கண்ணாடியைப் பார்க்காமல் இடதுபுறமாகவோ அல்லது வலதுபுறமாகவோ திரும்பக்கூடாது. அவ்வாறு செய்வதால் அதிக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!