Home செய்திகள் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,22,589 வாக்காளர்கள் ..

திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,22,589 வாக்காளர்கள் ..

by ஆசிரியர்

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் , 31.01.2019-ஆம் நாளை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2019 அடிப்படையிலான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (31.01.2019) வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணைய அட்டவணைபடி 01.01.2019-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த 01.09.2018 முதல் 31.10.2018 வரையிலான நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்வதற்கு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி திருவாடானை ராமநாதபுரம், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1367 பாகத்தில் 5,60,173 ஆண் வாக்காளர்களும், 5,62,347 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 11,22,589 (பதினொரு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து ஐநூற்று எண்பத்து ஒன்பது மட்டும்) வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக 01.09.2018 முதல் 31.10.2018 வரை வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு 9,670 ஆண் வாக்காளர்கள், 10,542 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 20,218 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 18 முதல் 19 வயது வரையில் 10,785 வாக்காளர்களும், 19 முதல் 29 வயது வரையில் 9,433 வாக்காளர்கள் அடங்குவர். 6,111 ஆண் வாக்காளர்கள், 5, 564 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 11,677 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் உள்ளனர். இரட்டை பதிவு காரணமாக 1,830 நபர்களும், இடமாற்றம் காரணமாக 3, 463 நபர்களும் இறப்பு காரணமாக 6,384 நபர்களும் நீக்கப்பட்டுள்ளனர் இன்று (ஜன., 31 ) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 01.09.2018 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட 8,541 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களான ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப் பதிவு அதிகாரிகளான வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் அலுவலகங்களிலும், நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் வாக்காளர் பட்டியல்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள்: 11, 22,589 (ஆண்கள் : 5,60,173 பெண்கள்: 5,62,347 மூன்றாம் பாலினம்: 69 ) ராமநாதபுரம் சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 2,92,139 ஆண்கள் : 1,45,350 பெண்கள் : 1,46,770 மூன்றாம் பாலினம் :19 பரமக்குடி சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 2,49,402 ஆண்கள்:1,23, 650 பெண்கள்:1,25,732 மூன்றாம் பாலினம்: 20 திருவாடானை சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 2,78,086 ஆண்கள் :1,39,427 பெண்கள்:1,38,638 மூன்றாம் பாலினம்: 21) முதுகுளத்தூர் சட்ட சபை தொகுதி மொத்த வாக்காளர்கள்: 3,02,962 ஆண்கள் :1,51,746 பெண்கள்:1,51,207 மூன்றாம் பாலினம்: 9

கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கண்ணபிரான், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ராமநாதபுரம்) வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், (திருவாடானை) மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், (முதுகுளத்தூர்) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரா.சிவதாசு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, தேர்தல் வட்டாட்சியர் முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!