Home செய்திகள் பென்னாகரம் அருகே தீண்டாமை வேலி அமைக்கப்பட்டதை அகற்றக்கோரி கிராம மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ..

பென்னாகரம் அருகே தீண்டாமை வேலி அமைக்கப்பட்டதை அகற்றக்கோரி கிராம மக்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் ..

by ஆசிரியர்

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி கிராமத்தில் இருவேறு சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் 2 ஆயிற்த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் பொது சாலையில், அதே பகுதியை சேர்ந்த அருந்ததையினர் காலணியை சேர்ந்தவர்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் இந்த பொதுசாலையில் இந்த காலணியை சேர்ந்த மக்கள் செல்ல கூடாது என மற்றோரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தடுப்பு வேலி அமைத்தனர். இதனால் அருந்தையினர் காலணியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல வழி இல்லாத சூழல் ஏற்பட்டது.

இதனால் பள்ளி,கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் அலட்சியாக இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கூத்தப்பாடியில் உள்ள அருந்ததையினர் காலணியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு செல்லும் பாதையில் ஓரு பிரிவினர் தீண்டாமை வேலி அமைத்துள்ளனர். இதனை அகற்ற வேண்டும் என இன்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு அமர்ந்துக்கொண்டு ரேசன்கார்டு, வாக்காளர் அடையாளஅட்டை, ஆதார்கர்டுகளை வீசி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சார்ஆட்சியர் சிவன் அருள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு தீண்டாமை வேலி அகற்றி இதற்கு காரணமானர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தர்மபுரி செய்தியாளர் .என். ஸ்ரீதரன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!