கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கத்தியால் குத்தி கொலை..

திண்டுக்கல் அடுத்துள்ள என். எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (40)இவர் GTN கல்லூரி எதிரே டீ கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நத்தம் அருகே உள்ள செங்குறிச்சி மணக்காட்டூரை சேர்ந்த முருகன்(43) என்பவருக்கும்  இடையே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பணத்தை திரும்பி வாங்குவதற்காக செங்குறிச்சி சென்ற சிவகுமாரை -முருகன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில்  படுகாயமடைந்த சிவகுமார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தி:-ஃபக்ருதீன. திண்டுக்கல்

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..