இராமநாதபுரத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பதற்கு நிர்வாகத்தின் மூலம் சேகரிப்பு மையம்..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பதற்கான சேகரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்களின் அத்தியாவசிய தேவையான:-

– தண்ணீர் பாட்டில்கள்
– பிஸ்கட் , ரஸ்க், பிரெட் பாக்கெட்டுகள்
– காய்கறிகள்
– அரிசி மூட்டை
– பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்கள்
– பால் பவுடர்
– மளிகைப் பொருட்கள் (பாக்கெட்டுகளாக)
– மருந்து பொருட்கள்
– சாப்பாட்டு தட்டுகள்
– டம்ளர்கள்
– சமையல் பாத்திரங்கள்
– போர்வைகள்
– தார்பாய்கள்
– பாய்கள்
– கைலிகள், நைட்டிகள்
– பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள்,நாப்கின்கள்
– மெழுகுவர்த்திகள்,  தீப்பெட்டிகள் போன்றவை.

நிவாரணப் பொருட்களாக பழைய துணிகள் வழங்குவதை தவிர்த்திடவும்.  புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்திட எண்ணும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற அளவு மேற்குறிப்பிட்டுள்ள நிவாரணப் பொருட்களை வழங்கலாம்.

நிவாரணப் பொருள் சேகரிக்கும் மையம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக (புதிய கட்டடம்) கீழ்தளம்


பொறுப்பு அலுவலர்
பேரிடர் மேலாண்மைப் பிரிவு வட்டாட்சியர் திரு.சீ.சுரேஷ்குமார்
தொடர்பு எண்கள் : 95004 40118,  63818 75602
04567-230060

கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு அலுவலர்கள்
1. மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சி.முத்துமாரி
தொடர்பு எண் : 94450 00926

2. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.கண்ணபிரான்
தொடர்பு எண் : 94450 08147

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.