Home செய்திகள் வத்தலகுண்டு அரசு பள்ளியின் சேவையை பாராட்டி கிராம மக்கள் கல்விச் சீர் வழங்கிய அதிசயம்..

வத்தலகுண்டு அரசு பள்ளியின் சேவையை பாராட்டி கிராம மக்கள் கல்விச் சீர் வழங்கிய அதிசயம்..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கட்டக் காமன் பட்டி கிராமம் இங்கு 700 வீடுகள் உள்ளது இதில் சுமார் 2500 பேர் வசிக்கின்றனர். இங்கு ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

இப்பள்ளி கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பாக நொறுங்கிய நிலையிலுள்ள ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது குறைந்த அளவே மாணவர்கள் படித்து வந்தனர். இந்த பள்ளியில் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த விஜயா என்பவர் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பதவியேற்றார். அதன் பிறகு அரசிடம் கேட்டு புதிய கட்டிடங்கள் பெற்றார். பல சமூக சேவை தொண்டு நிறுவனங்களிடம் கேட்டு மேடை, நவீன டேபிள் சேர் கம்ப்யூட்டர் போன்ற கல்வி உபகரணங்கள் பெற்று சுகாதாரத்தை போற்றி மரக்கன்று நட்டு பள்ளியை பூஞ் சோலையாக்கினார். அதைத் தொடர்ந்து அரசு மாநில அளவில் சுகாதாரத்திற்கான சிறந்த பள்ளி விருதை வழங்கியது.

பள்ளி மாணவர்கள் எண்ணிக் கை உயர்ந்து கொண்டே இருந்தது அப்பள்ளி மாணவர்கள் பல போட்டிகளில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பள்ளியின் பெருமையால் மகிழ்ந்து போன அவ்வூர் மக்கள் பள்ளிக்கு உறவினர்கள் சீர்வரிசை கொடுப்பது போல் கொடுக்க முடிவு செய்தனர். பள்ளிக்கு தேவையான பீரோ, டேபிள் சேர் பானைகள் உள்பட ஏராளமான பொருட்களை சுமந்தவாறு கொட்டு மேளம் முழங்க பட்டாசு வெடிக்க ஊர்வலமாக வந்து பள்ளிக்கு சீர்வரிசையை அளித்தனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!