கழுகூரணி டாஸ்மாக் அருகே மர்மமான முறையில் இளைஞரின் உடல்..

இராமநாதபுரம் அருகே கழுகூரணி டாஸ்மாக் கடையில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையைச் சேர்ந்த அப்பாவு மகன் சதீஷ்குமார்,35.  இவர் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் சி டி கடை வைத்துள்ளார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கழுகூ ரணி டாஸ்மாக் கடை வாசலில் முகத்தில் படுகாயங்களுடன்  மர்மமான முறையில் இன்று காலை இறந்து கிடந்தார் தகவலறிந்த இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். கைப்பற்றிய சதீஷ் குமார் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..