₹.2000/- லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது ..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் வட்டாட்சியராக பணியாற்றி வரும் ரேணுகா லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்க ரூ.2000 லஞ்சம் வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர்
கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )