கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி பிளாஸ்டிக் ஒழிப்புப் பேரணி

கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்புப் பேரணி முள்ளுவாடி கிராமத்தில் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் இறுதி நாளான இன்று திருப்புல்லாணி ஒன்றிய தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தக்கலை பீர் முகம்மது நெகிழி ஒழிப்புப் பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார்.


நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா தலைமை ஆசிரியர் ஜவஹர் பாருக் தலைமையில் நடைபெறறது. கிராமத் தலைவர் முருகேந்திரன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தக்கலை பீர் முகம்மது வரவேற்புறை நிகழ்த்தினார். சிறப்பு முகாம் அறிக்கையினை முகாம் அலுவலர் பசீர் வாசித்தார். இறுதியாக முகாம் துணை அலுவலர் பாரதி தாசன் நன்றியுரை வழங்கினார்.