ரூ20 ஆயிரம் பேரம், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே தத்தங்குடி கணசாயில் அளவுக்கதிமாக மணல் அள்ளப்படுவதாக பரமக்குடி சப் கலெக்டர் விஷ்ணு சந்திர க்கு தொடர் புகார்கள் வந்தன. இதன்படி 19.9.2018ல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தத்தங்குடி கண்மாய் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசைகளை உடனடியாக அப்புறப்படுத்த சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். ஆய்வின்போது சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது நசீர், மணல் கொள்ளையர்களிடம் பண பேரம் பேசிய ஆடியோ ஊடகங்களில் 22.9.2018ல் வெளியானது. அந்த ஆடியோவில் 3 லோடு மணலுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என மணல் கடத்தல்காரர் காளிதாசிடம் முகமது நசீர் பேரம் பேசியது ஆடியோவில் இருந்தது. இது குறித்து விசாரிக்க இராமநாதபுரம் எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா, டி.எஸ்.பி., நடராஜ க்கு உத்தரவிட்டார். விசாரணை அறிக்கைபடி சிக்கல் இன்ஸ்பெக்டர் முகமது நசீரை ராமநாதபுரம் டிஐஜி காமினி இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்