வத்தலக்குண்டு பகுதிகளில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரை சோதனை செய்ய அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம் சார்பாக மனு..வீடியோ..

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் என கூறி ? விற்பனை செய்யப்படும் நீரை, ஆய்வு செய்ய வேண்டும் என்று வத்தலக்குண்டு BDO அவர்களிடம், அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் வத்தலக்குண்டு பகுதிகளில், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் என கூறி வாகனங்களில் நீர் விற்பனை செய்யப்படுகிறது,இந்த நீர் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்ட நீர் தானா? என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது, மக்களின் நலன் கருதி இந்த நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று, அகில இந்திய இளைஞர் வளர்ச்சி சங்கம், திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் அந்தோணி விவேக், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் திணேஷ், மற்றும் நகர தலைவர் கௌதம், ஆகியோர், வத்தலக்குண்டு BDO அவர்களிடம் மனு அளித்திருக்கின்றனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..