இராமநாதபுரத்தில் பல குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்..

இராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே என் மங்கலம் பரமக்குடி , ஆர்.காவனூர் கமுதி அருகே மூலக்கரைபட்டி/முதுளத்தூர் அருகே கிடாத்திருக்கை உள்பட 9 இடங்களில்  நடக்கவிருந்த ஒன்பது குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

இத்திருமணம் ராமநாதபுரம் அருகே ஆர் காவனூர் கார்த்திக் 30, சிவகங்கை மாவட்டம் தே.புதுக்கோட்டை கனகராஜ் 27 , திருவாடானை வட்டம் நிலமங்கலம் கலையரசன் 27. ராமேஸ்வரம் வட்டம் தங்கச்சிமடம் ரெஸின் 26, திருப்புல்லாணி ஒன்றியம் நயினா மரைக்கான் ராஜா 31, திருவாடானை ஒன்றியம் பாப்பன கோட்டை பாலமுருகன் 31, கடலாடி வட்டம் மேலச்செல்வனூர் அருகே திருமுருகன் 33, தரைக்குடி பாலமுருகன் 40 ஆகியோருடன் நடக்க இருந்தது.

மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர துரைமுருகன், சைல்டு லைன் பணியாளர்கள், வருவாய்த் துறை பணியாளர்கள், போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுத்து நிறுத்தினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..