மத உணர்வுகளை மதிப்பதாக கூறி உணர்வுகளை மிதிக்கும் உத்திரபிரதேச அரசு..

பண்டிகையின் பெயரால் தடுக்கப்பட்ட விலங்குகளை அறுக்கக்கூடாது, பொது வெளியில் விலங்குகளை பலியிடக்கூடாது, அறுக்கப்பட்ட விலங்கின் குறுதியை வாய்க்காலில் விடக்கூடாது என அறிக்கைக்கு கூறும் காரணம் , பிற மத உணர்வுகளை மதிக்கவே என்பதாகும்.  ஆனால் இந்த உத்தரவால் சிறுபான்மையினரின் உணர்வுகளை கால்களில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். இந்த உத்தரவு மூலம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையை பிறரிடம் புகுத்த முயற்சிக்கிறார்  உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மாட்டின் பெயரால் மனித உயிர்களை பலி கொடுக்கும் பாசிஸ பயங்கரவாதிகளை ஒடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்,  பண்டிகை தினத்தை முன்னிட்டு  இது போன்ற கருத்துக்களை வெளியிடுவது மத துவேஷத்தையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் என்று எதிர் கட்சியினர் விமர்சனம் செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன் முறையாக யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தான், பக்ரித் பண்டிகை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்ற வழிமுறையை வகுத்து இருப்பது முதல் முறையாகும். மாட்டின் பெயரால் மனித நேயம் கொல்லப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க மதம் என்ற பெயரால் மதம் பிடித்து அலையும் பாசிஸ்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இந்த நிலை நீடிக்கும் என்ற அச்சத்தோடு சிறுபான்மையினர் புதிய இந்தியா எப்போது பிறக்கும் என்று எதிர்ப்பார்த்து உள்ளனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..