கீழக்கரை கூட்டுறவு வங்கி தேர்தல் முடிவு..

கீழக்கரை தொடக்க மேலாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தல் கடந்த 07.05.2018 அன்று நடைபெற்றது. 1800க்கு மேல் உறுப்பினர்களை கொண்ட கூட்டுறவு வங்கயில் 691 ஓட்டுகள் பதிவானது.

வங்கியில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 11 பேர் வங்கி நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர். முன்னாள் தலைவர் இராஜேந்திரன் ஓர் அணியாகவும், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஹாஜா மைதீன் ஓர் அணியாகவும் போட்டியிட்டனர்.

இன்று (07.08.18) காலை 10.15 மணிக்கு, கீழக்கரை கூட்டுறவு வங்கியில் ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. முன்னதாக, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுப்பெட்டி எடுத்துவரப்பட்டு, இரு அணியின் முகவர்களிடம் முத்திரையிடப்பட்ட வாக்குப் பெட்டியை காண்பித்து  ஓட்டை பிரித்து எண்ணி முடிவுகளை அறிவித்தனர். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில்  இராஜேந்திரன் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

நவம்பர் மாத இதழ்..

நவம்பர் மாத இதழ்..