Home செய்திகள் ஒளிந்திருக்கும் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் “WILL MEDAL” – கராத்தேவில் உலக சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்..முழுமையான புகைப்பட தொகுப்பு..

ஒளிந்திருக்கும் திறமைகளை உலகுக்கு அடையாளம் காட்டி வரும் “WILL MEDAL” – கராத்தேவில் உலக சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்..முழுமையான புகைப்பட தொகுப்பு..

by ஆசிரியர்

உலக சாதனைகள் என்றால் வசதி படைத்தவர்கள் மட்டும் தான் செய்ய முடியும், அப்படியே ஒரு சாமானியன் சாதனை புரிந்தால், அவன் சாதனையை உலகுக்கு அறிமுகப்படுத்த பல சோதனைகளை சந்திக்க வேண்டும்.  அந்த வேதனைகளையும், சாதனைகளாக்கி சாமானியனையும் உலகுக்கு அறிய வைக்கும் பணியில் உள்ள அமைப்பு தான் “WILL MEDAL OF WORLD RECORDS” & “MUGAVAI RECORDS”. இந்த அமைப்பு உலகுக்கு வெளிய தெரியாமல் சாதாரண கிராமத்து மக்களின் சாதனைகளை கூட வெளி உலகுக்கு கொண்டு வந்து, அனைவராலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி வருகிறார்கள் என்றால் மிகையாகாது.

இதன் தொடர்ச்சியாக நேற்று (03/08/2018)  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.ச.தருணிஷ் (9- வயது) உலக சாதனை உட்பட ஒரே நாளில் மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளான். சிறுவயது முதலே கராத்தே கலையில் திறமை வாய்ந்த தருணிஷ் இந்தியாவிற்கு 47 தங்கப்பதக்கம் உட்பட மொத்தம் 72 பதக்கங்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பெற்றுள்ளார். தற்போது இச்சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 52 கட்டாக்களை ( கட்டாக்கள் என்பது கற்பனை சண்டை முறைகள்)  செய்து காண்பித்து வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்-ல் (WILL MEDAL OF WORLD RECORDS) இடம்பிடித்து உலக சாதனை படைத்துள்ளான்.

அதே போல் ஒரு நிமிடத்தில் 180ற்கும் மேற்பட்ட முறைகள் சீக்கோ டாட்சி பஞ்ச் செய்து வில் மெடல்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ் (WILL MEDALS NATIONAL RECORDS )ல் இடம்பெற்று தேசிய சாதனை படைத்துள்ளான். கராத்தே கலையில் 504 வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்தி வில் மெடல்ஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் (WILL MEDALS KIDS RECORDS)ல் இடம்பெற்று சாதனை படைத்துள்ளான்.

இச்சிறுவனின் இச்சாதனைகளை நேரில் ஆய்வு செய்த வில் மெடல் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், வில் மெடல்ஸ் நேஷனல் ரெக்கார்ட்ஸ், வில் மெடஸ் கிட்ஸ் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் – தலைவர் கவிஞர்.ஆ.கலைவாணி மற்றும் முதன்மைச்செயலர் சீ.தஹ்மிதா பானு ஆகியோர் உலக சாதனை உட்பட ஒரே நாளில் மூன்று விதமான சாதனைகள் படைத்த சிறுவன்.ச.தருணிஷிற்கு சாதனை படைத்தமைக்கான சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கினர்.

இந்த விழாவில் பேசிய வில் மெடல் நிறுவன தலைவர் கவிஞர்.கலைவாணி’ “அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் அவர்களின் சாதனைகளுக்கும் எங்கள் நிறுவனம் எப்போதும் ஆதரவு நல்கும்”  என  சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு அப்பள்ளி மாணவ, மாணவியர் அளித்த உற்சாகமும் கரகோஷமும் சாதனை மாணவனை உலக சாதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ய பேருதவியாக அமைந்தது.

புகைப்பட தொகுப்பு

TS 7 Lungies

You may also like

3 comments

Anonymous August 4, 2018 - 3:00 pm

Happy to see this way of publishing newses.Will medal of world records really thank you keelai news.It is the best motivation to our org.Thank you once again.

Thahmitha August 4, 2018 - 3:23 pm

Thank you. your support is encouraging to the people those who had achieved and those who are going to achieve.

முகவை இராசா August 4, 2018 - 9:32 pm

சாதனை நிகழ்த்திய சிறுவனுக்கு வாழ்த்துகள்! அதனைக் கண்டறிந்து அங்கீகரித்த வில் மெடல் நிறுவனர் கலைவாணி மற்றும் முதன்மைச் செயலர் தஹ்மிதாபானு ஆகியோருக்குப் பாராட்டுகள்! மிகப்பெரிய பணிகளைச் செய்துவரும் வில் மெடல் குழுவினரின் சேவைப்பணி தொடரட்டும்!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!