வரும் 03/08/2018 முதல் கீழக்கரையில் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம்….

கீழக்கரை “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” சார்பாக வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் “கிதாபுத் தவ்ஹீத்” வகுப்பு ஆரம்பம் ஆக உள்ளது.  இவ்வகுப்புகள் மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடைபெற உள்ளது. மேலும் இவ்வகுப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளது சிறப்பு அம்சமாகும். இந்த வகுப்புகளை சிறப்பு சொற்பொழிவாளர் மௌலவி. செய்யது முஹம்மது ஜமாலி கலந்து கொண்டு வழங்க உள்ளார். இந்நிகழ்வில் கீழ்கண்ட பாடத்திட்டங்கள் எடுக்கப்படும் என இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தொிவித்துள்ளார்கள்.

  • தவ்ஹீத் என்பது ஒரு இயக்கமா? அல்லது அமைப்பா?  அல்லது நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வாழ்வியல்
    கொள்கையா?
  • தவ்ஹீதில் மூன்று வகைகள் உண்டு என்பதை தெரிந்திருக்கிறோமா?
  • தவ்ஹீத் உலூகியா, தவ்ஹீத் ருபூபியா, தவ்ஹீத் அஸ்மாவுஸ்ஸிஃபாவை பொருளுணர்ந்து அறிந்து வைத்திருக்கிறோமா?
  • ஷிர்க் என்பது நாம் நினைத்திருக்கும் சிலை வணக்கம்,  தர்ஹா வழிபாடு, தகடு தாயத்து மட்டும் தானா?
    மற்றவையெல்லாம்…!??
  • ஷிர்க்குல் அக்பர், ஷிர்க்குல் அஸ்கர் என்றால்  என்னவென்று தெரியுமா?

வகுப்பின் விதிமுறைகள் /சிறப்பம்சங்கள் :
– இந்த வகுப்பு  ஆண்களுக்கு மட்டும்.
– முன் பதிவு அவசியம்
-15 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
– வகுப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கிதாபுத் தவ்ஹீத் புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
– அனைத்து வகுப்புகளிலும் கலந்து கொள்பவர்களுக்கு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

முன் பதிவு செய்யும் வழிகள் :
1. கூகில்(Google forms) : www.goo.gl/e5C63Y
2. Whatsapp or Phone call : 7448984744

இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image