Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது..

இராமநாதபுரம் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

​இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த அரசுத் துறைகளின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-2018 -ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் மொத்தம் 1,49,696 விவசாயிகள் மூலமாக 1,22,640 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிருக்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டிருந்தது.  அவற்றில் பயிர்காப்பீடு இழப்பீடு தொகையாக இதுவரையிலும் மொத்தம் ரூ.518.00 கோடி மதிப்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவட்டத்தில் உள்ள 393 வருவாய் கிராமங்களில் இதுவரை மொத்தம் 382 வருவாய் கிராமங்களுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள பெருங்குளம், கூகுடி, தட்டனேந்தல்ää கள்ளிக்குடி, பொதுவக்குடி, சடைக்கானேந்தல், டி.கரிசல்குளம்äந, பம்மனேந்தல், பெருநாழி, நீராவி, அரியமங்களம் ஆகிய 11 வருவாய் கிராமங்களுக்கு ரூ.43.89 கோடி வரப்பெற்று அனைவருக்கும் வங்கிகணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

​அதேபோல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை, நீர்வள நிலவள ஆதார அமைப்புää மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் பல்வேறு நீர்நிலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக,  நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் என மொத்தம் 53 கண்மாய்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 98 ஊரணிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ரூ.31.20 கோடி மதிப்பில் 64 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

​மாவட்ட நீர்வடிப்பகுதி முகமையின் மூலம் 191 ஊரணிகளில் 860 பணிகள் சுமார் 10 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றது. 1,15,000 மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 31க்குள் நிர்ணயிக்கபட்ட அனைவருக்கும் 100 சதவீதம் என்கிற வகையில் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு விடும். மண்வள அட்டை பெற்ற விவசாயிகளுக்கு மண்ணிற்கேற்ற வகையில் எந்தெந்த வகையில் உரமிட்டால் அதிக மகசூலை பெறலாம் என்பது குறித்து வேளாண் துறையின் மூலம் உரிய அறிவுரை வழங்கப்படும். ​ ​சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நிர்ணயிக்கப்பட்ட 1275 ஹெக்டேர் பரப்பளவில் 60 சதவீதம் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 40 சதவீதம் ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். சொட்டு நீர் பாசனத் திட்டம் தான் நமது மண்ணிற்கு மிகவும் ஏற்றது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

​மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நல திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் இந்திய அரசு அறிவித்துள்ளபடி, 2022ல், ‘முன்னேற்றமடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும்” என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் (Aspirational District) மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ​ அவற்றில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை பாதுகாத்திடும் வகையில் பல்வேறு வேளாண்மை நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் வருமானத்தினை இரட்டிப்பாக்கும் நோக்கத்தில் மாவட்டத்தில் உள்ள 25 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 2760 விவசாயிகளுக்கு சிறுதழை (மினிகிட்) வழங்கப்பட்டுள்ளது. 11,500 பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. கால்நடைப் பராமரிப்பு துறையின் வாயிலாக 4321 கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தேசிய தேனி வளர்ப்பு வளர்ச்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் 50 பேர்களுக்கு தேனி வளர்ப்பு பயிற்சி வழஙக்ப்பட்டு தேனி வளர்ப்புக்குண்டான பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

​மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் 01.07.2018 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. நூறு சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்து தங்களது குடும்பத்தார் மற்றும் சுற்றத்தாரிடத்திலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்த்திட விவசாயிகள் ஊக்குவித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசினார்.

​இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) தசொர்ணமாணிக்கம்ää மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, நபார்டு வங்கி மேலாளர் தஎஸ்.மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!