வகுப்பறையில் ஒய்வு நேரத்தில் பனைஓலையில் கலைப்பொருட்கள் அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்…

கடலாடி அருகே நரசிங்ககூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு தலைமையாசிரியர் உட்ப இரு ஆசிரியர்களும், 21 மாணவ, மாணவியர்களும் உள்ளனர். தனியார் பள்ளிகளின் கவர்ந்திழுப்பால்கிராமப்புறங்களில் ஏராளமான மாணவர்கள் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் சேர்க்கை விகிதம் குறைந்து வந்தது. மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் பாடம் பயிற்றுவிக்கவும், கலைநயப்பொருட்களின் மீது ஈடுபாட்டை அதிகரித்து,இயற்கை சார்ந்த விஷயங்களை ஆழமாக புரியவைத்தால், தனித்துவம் பெறலாம் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார் பள்ளித்தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன்.

இதுகுறித்து கூறும் போது, வகுப்பறையில் உணவு இடைவேளை, உள்ளிட்ட ஓய்வு நேரங்களில் பனைஓலைகளின் கலைநயப்படைப்புகளாக வாட்சு, விசிறி, காத்தாடி, புத்தக மார்க், யானை, மீன், வாத்து உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட உருவங்களை செய்து சொல்லிக்கொடுக்கிறேன். வருடம் 1 முறை மாணவர்களை அழைத்துக்கொண்டு கல்விச்சுற்றுலாவும், அருகில் உள்ள கிராமங்களுக்கு விடுமுறையில் களப்பயணம் செய்கிறோம்.வகுப்பறையில் நுõலகம் அமைத்துள்ளேன். மாணவர்கள் ஆர்வமுடன் விரும்பி படிக்கின்றனர். இன்றைய சூழலில் கல்விப்படிப்பை தாண்டி,பொது அறிவுசார்ந்த விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். ஆளுக்கு ஒரு மரம் என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, நீர் ஊற்றி மாணவர்கள் வளர்த்து வருகின்றனர். இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.