திட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியத்தை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும். லாரிகளுக்கான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 20-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். இந்த முறை லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மிக தீவிரமடையும்.
இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் இயங்காது. இது தவிர, எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் பங்கேற்க உள்ளன. நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைமுகங்களும் மூடப்படும். இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.