தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகள் மீது கொலை வெறி தாக்குதல்…திட்டமிட்ட சதியா??

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்ட செயற்குழு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கீழக்கரையில் இருந்து 500 பிளாட் கிளை நிர்வாகிகள் 7 பேர் ஆம்னி வாகனத்தில் இன்று (29/04/2018) மாலை இராமநாதபுரம் சென்றார்கள். அவ்வாறு  செல்லும் வழியில் ஆர்.எஸ் மடை ஊரை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சென்ற வாகனம் மீது விழுவது போன்று இருசக்கர வாகனத்தில்  அருகில் ஓட்டி சென்றுள்ளனர்.

வண்டியில் பயணம் செய்தவர்கள், கீழே இறங்கி கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். அச்சமயம் இசரசந்தர்ப்பத்திற்காகவே பதுங்கியிருந்த மர்ம நபர்கள் வேனில் பணித்தவர்களை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்கள்.

வாகனத்தில் இருந்த  நிர்வாகிகள் சுதாரிக்கும் முன்பு கிளைத்தலைவர் சுல்த்தான் தனது சட்டைப்பையில் வைத்திருந்த 4000ரூபாயையும்,  டிரைவிங் லைசன்ஸ்,  உறுப்பினர் அட்டைகள்  ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு கருவேல மரங்கள் வழியே தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தில்  படுகாயமடைந்த கிளை செயலாளர் ஹாஸிம் ரஸ்வி(24) யை உடனடியாக மீட்கப்பட்டு  மேல் சிகிச்சைக்கு இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் மாநில நிர்வாகிகள்  இராமநாதபுரம் B1காவல் நிலையத்தில், மத நல்லிணக்கத்தை குழைக்கும் வண்ணம் இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். இது போன்று சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடக்க ஆரம்பித்துள்ளது, இதை ஆரம்பத்திலேயே காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இது போன்று மத மோதலை உண்டு பண்ண துடிக்கும் கயவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை மெத்தனப்போக்கை கையான்டால் மாநில தலைமையின் ஆலோசனை படி அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட செயலாளர் சாகுல் தெரிவித்துள்ளார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image