
ஒரு காலத்தில் தேங்காயிலிருந்து எஞ்சிய பொருளாக கிடைத்த “கொட்டாங்கச்சி” எனும் சிரட்டை, பிள்ளைகள் விளையாடும் பொருளாக, விறகு அடுப்பிற்கு எரிபொருளாக, மூங்கில் சட்டத்தால் கைப்பிடி போடப்பட்டு அகப்பையாக, இப்படி பல வழிகளிலும் நமக்கு உதவியது!
ஆனால் இப்போது அதுவும் கடல் கடந்து பயணித்து மேற்கத்திய நாடுகள் வரை சென்றடைந்துவிட்டது! “MALIBU” எனும் பெயர் கொண்ட நிறுவனம் தயாரிக்கும் ஒருவகை மதுபானத்தை வாங்கினால் அதை ஊற்றி மிக லாவகமாக அனுபவித்து குடிக்க இந்த கொட்டாங்கச்சியால் செய்த கைவினை கோப்பையை இலவசமாக தருகிறார்களாம் லண்டன் மாநகரத்தில், அதை விற்கும் நிறுவனத்தினர்.
“தட்டிப்பாத்தேன் கொட்டாங்கச்சி… தாளம் வந்தது பாட்ட வெச்சி” என்று எங்கள் மயிலாடுதுறை மண்ணின் மைந்தர் டி.ராஜேந்தர் அவர்கள் தங்கைக்கோர் கீதம் படத்தில் கொட்டாங்கச்சியை அடித்துக்கொண்டே பாட்டுபாடுவார்.
இப்போது லண்டன் நகரத்தில் மது குடிப்பதற்காக இந்த கொட்டாங்கச்சி பயன்படுத்துப்படுவது பேஷனாகி விட்டது. ஆனால் நம் முன்னோர் காலத்தில் மேல் சாதியனர் கடைகளில் இதே கொட்டாங்கச்சி தான் கீழ் சாதியினருக்கு தேநீர் கொடுக்க “இரட்டை குவளை” முறையாக பயன்படுத்தி வந்தனர்.
எப்பொழுதுமே ஓரு பொருள் அருகில் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரிவதில்லை, ஆனால் அது மாற்றான் கைக்கு செல்லும் பொழுது, அதற்கு மவுசு கூடுதலாக தெரியும், அதற்கு இந்த கொட்டாங்கச்சி மட்டும் விதி விலக்கா என்ன??
தகவல் உதவி:- சம்சுல் ஹமீது.
You must be logged in to post a comment.