Home செய்திகள் இராமநாதபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..

இராமநாதபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மண்டபம் அருகேயுள்ள இடையர்வலசையில் ஏழு கிராமங்களுக்கு பாத்தியமான ஸ்ரீ சக்தி வடிவேல் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 21-ம் தேதி கொடி எற்றி 400க்கு மேற்ப்பட்ட பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.

பங்குனி உத்திரத்தன்று சக்தி வடிவேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகநாதர் ஆலயத்திலிருந்து சக்தி வடிவேல் முருகன் ஆலயத்திற்க்கு பால்குடம், இளநீர் காவடி, பறவை காவடி, மயில் காவடி, ஸர்ப்ப காவடி, தேர் இழுத்தல் அலகு குத்தல் என பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் பக்தர்கள் , பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு எட்டு மணிக்கு பூக்குழி இறங்குவற்கு பூவளர்க்கபட்டது. அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் பூ இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பெண் பக்தர்கள் பூ இறங்க அனுமதி இல்லாத காரணத்தால் பெண் பக்தர்கள் பூ குளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

பெரும்பாலான பக்தர்கள் தொடர்ந்து காப்பு கட்டி பூ இறங்கி வருகின்றனர், இந்த பழக்க வழக்கங்களை பற்றி பக்தர்கள் கூறியதாவது, “வேண்டியது நிறைவேறுகிறது, அதனால் வருடா வருடம் காப்பு கட்டி வருகிறேன். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு புதிதாக காப்பு கட்டும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டு வருகிறது என்று கூறினர்”.

மேலும் 31-ம் தேதி இரவு இடுப்பன் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றதுடன் விழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ம.ஆதிமூலம், ஆலய நிர்வாகசபை தலைவர் P.தவசி முனியாண்டி, செயலாளர் M.சுரேஷ் கந்தன், பொருளாளர் PM.நாகசாமி, மற்றும் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். மண்டபம் காவல்துறை சார்பு ஆய்வாளர் அந்தோணி சகாயசேகர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!