முன்னாள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா..

தமிழக முன்னாள் முதலமைச்சர் 70வது பிறந்த நாளினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், பட்டிணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி அம்மா பூங்காவில் இன்று (31.03.2018) வனத்துறை சார்பாக 2018-2019ஆம் ஆண்டிற்கான மாபெரும் மரக்கன்று நடும் திட்டத்தினை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் இ.ஆ.ப. தலைமை வகித்தார். இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்.

மரக்கன்று நடும் விழாவினை துவக்கி வைத்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் முன்னாள் முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் விளக்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழச்சியில் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் ததூ.கோ.அசோக்குமார்.இ.வ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் தசி.முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஆ.செல்லத்துரை, மாவட்ட வன அலுவலர் எஸ்.கமலக்கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, இராமநாதபுரம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, வனச்சரக அலுவலர் ப.ஞானப்பழம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.