வண்ணாங்குண்டு முதலாமாண்டு மின்னொளி கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது…

இராமநாதபுரம் மாவட்டம் வணணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது. இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் பரிசாக ₹.10,001/- மற்றும் சுழற்கோப்பையை சித்தார்கோட்டை அணியும், இரண்டாவது பரிசு ₹.5,001/- மற்றும் சுழற்கோப்பையயை பெருங்குளம் அணியும், மூன்றாவது பரிசு ₹.3,001/- மற்றும் சுழற்கோப்பையை சக்கரக்கோட்டை அணியும் கைப்பற்றினர்.

இந்த முதலாம் ஆண்டு மின்னொளி கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு கால்பந்து குழுவினர் (VFC) சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.