கீழக்கரை-ஏர்வாடி சாலையில் தொடரும் கால்நடை விபத்து… இறந்து கிடக்கும் கால்நடையால் நோய் பரவும் அபாயம்…

கீழக்கரை வழியாக ஏர்வாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும்.

இவ்வழியில் சிறு கிராமங்கள் இருப்பதால் அதிகமான கால் நடைகளும் உள்ளன். ஆனால் இவ்வழியாக செல்லும் வாகனங்களோ அதி வேகமாக செல்வதால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் அடிக்கடி வாகனங்கள் மீது மோதி காயம் அடைந்தும், சில நேரங்களில் இறந்தும் விடுகின்றன.

இரண்டு தினங்களுக்கு முன்பு முள்ளுவாடி அருகே மாடு ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து விட்டது. ஆனால் இதுவரை நகராட்சி சுத்தம் செய்யாததால் துர்நாற்றம் தொடங்கி விட்டது. நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

2 Comments

  1. கீழை நியூஸ் பதிவை கவனமாக இடவும் முள்ளுவாடி மற்றும் அதன் அருகே உள்ள கிராமங்கள் தில்லையேந்தால் பஞ்சாயத்திற்கு உட்பட்டது அதை கீழக்கரை நகராட்சி சுத்தம் செய்ய அவசியம் இல்லை.

    • உங்கள் நினைவூட்டலுக்கு, மகிழ்ச்சி, ஆனால் நம் பதிவில் கீழக்கரை நகராட்சி என குறிப்பிடவில்லை. எனினும் உங்கள் அறிவுறுத்தல் கவனத்தில் கொள்ளப்படும்

Comments are closed.