2018 ஆம் ஆண்டில் இருந்து சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி -சவுதி அரேபியா அறிவிப்பு

சவுதி அரேபியாவில் வரும் 2018ம் வருடம் முதல் வணிக ரீதியான சினிமா அரங்கம் தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.  இந்த அறிவிப்பை கலாச்சாரத் துறை அமைச்சராக இருக்கும் அவ்வாத் அல்அவ்வாத்  தலைமையில்  இயங்கும் General Commission of Audiovisual Media என்ற அரசு அமைப்பு அறிவித்துள்ளது.  இத்திட்டம் சவுதி அரேபியாவின் விஷன் 2030 என்ற தொலைநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 80 ஆண்டுகளில் தடை செய்யப்பட்ட திரையரங்க தொழில் மீண்டும்  37 வருடங்கள் கழித்து தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மேலும்; இந்த அறிவிப்பினால் பல லட்சம் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்னும் அடுத்த 10 வருடங்களில் சுமார் 300 திரையரங்குகள் உருவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் பெருநாள் போன்ற விடுமுறை நாட்களில் சவுதி அரேபியாவின் அருகில் உள்ள நாடான பஹ்ரைனுக்கு செல்பவர்கள் மட்டும் குறைந்த பட்சம் 400 மில்லியின் ரியால் வரை செலவு செய்கிறார்கள் என்கிறது சமீபத்திய குறியீடு.  அதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டு முதல் பெண்களும் வாகனங்கள் ஓட்டலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.