கீழக்கரையில் மீண்டும் திருட்டு சம்பவம் ..

கீழக்கரை சின்னக்கடை தெரு பகுதி, சொக்கநாதர் கோவில் அருகில் உள்ள ரஹ்மத் ஸ்டோரில் நேற்றிரவு (02-12-2017) திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

இத்திருட்டு சம்பவத்தில் ரொக்கப்பணம் ₹.8000/- மற்றும் ₹ 10000/- மதிப்புள்ள கடையில் இருந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர. இது குறித்து கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமுத்து மற்றும் முனியாண்டி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த்சம்பவம் பற்றி கடையில் பணிபுரிபவரிடம் விசாரித்த பொழுது நேற்று 16 வயதுடைய இரு சிறுவர்கள் இங்கு போட்டோ எடுக்க வேண்டும் என்றும் கூறி வந்தனர், ஆனால் பணம் இல்லை என கூறிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர். எனவே வந்தவர்கள் நோட்டமிட வந்து இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறினார்.

இது போன்ற திருட்டு சம்பவங்கள் சிறுவர்களை குழுவாக கொண்டு செயல்படுவதாக தெரிகிறது. மேலும் இதுபோல் சமீபத்தில் சின்னக்கடை தெரு பகுதியில் மூன்று நான்கு வீடுகளில் செல்போண் மற்றும் ரொக்கம் திருடு போனதும் குறிப்பிடத்தக்கது .