இஸ்லாமியா பள்ளியில் உணவு திருவிழா (FOOD CARNIVAL) கோலாகலமாக நடைபெற்றது..

இன்று (30/11/2017) கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட உணவு திருவிழா ( FOOD CARNIVAL) சிறப்பாக நடைபெற்றது. காலையில் இருந்து அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தாலும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவிகள் கேக், சமோசா, பழவகை உணவுகள், குலோப்ஜாமூன் என வித விதமான உணவுகளை படைத்து வந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். மேலும் பல மாணவிகள் பழங்களையும், உணவு வகைகளையும் வைத்து கலைத் திறனுடன் பல படைப்புகளை உண்டாக்கியிருந்தது மிகவும் அற்புத்மாக இருந்தது.

பள்ளியின் தாளாளர் இபுராஹிம் பங்குபெற்ற அனைத்து மாணவிகளையும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் அனைவரது இடங்களுக்கும் சென்று உணவுகளை சுவைத்து, விபரங்களை கேட்டறிந்தார்.

மேலும் மழையினால் எந்த பாதிப்பும் வராத வகையில் பாதுகாப்பான முறையில் சாமியான கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தது மிகவும் ஆறுதலான விசயமாகும்.

புகைப்படத் தொகுப்பு 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.