மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் குழந்தைகள் தின விழா…

நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இக்குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை பாதுகாப்பதில் மக்கள் அனைவரையும் தூதுவராக்கும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட அரசு காப்பகத்தில் உள்ள பள்ளி குழந்தைகள், இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலுகத்தில் தலைமையிட கூடுதல் காவல்கண்காணிப்பாளர் இன்பமணி மற்றும் காவல் அதிகாரிகளுக்கும் கையில் பட்டை (WRIST BAND)அணிவித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

அக்குழந்தைகளுக்கு கூடுதல் காவல்கண்காணிப்பாளர் அவர்கள் தமது குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.