கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பல பரிசுகளை வென்றனர்..

சமீபத்தில் தொண்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தனித்திறன் போட்டியில் பல பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி S. ரிஜா உமைரா, தமிழ் உரை போட்டியில் முதல் பரிசும், F. ஆயிஷத் ருக்ஸானா, ஆங்கில உரை போட்டியில் முதல் பரிசும் வென்றனர் .

மேலும் இராமநாதபுரம் புனித ஆந்திரேயா பள்ளியில் நடைபெற்ற தனித் திறன் போட்டிகளில் இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவி A. சுலைகா பய்ஹா, கட்டுரை எழுதுதலில் முதல் பரிசும், H. மரியம் ஹமீதா, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர் .