கருணைக் கரம் நீட்டிய கீழக்கரை நகராட்சி..

கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் கருணை அடிப்படையில் மாரிமுத்து என்பவருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.

பரமக்குடி எம்.ஜி.ஆர் நகரைச் சார்ந்த R.மந்தன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு பணிக்காலத்தில் இயற்கை எய்தினார். அவரின் வாரிசான மாரிமுத்து என்பவருக்கு கருணை அடிப்படையில் கீழக்கரை ஆணையர் வசந்தி மற்றும் தலைமை எழுத்தர் சந்திரசேகர் முன்னிலையில் பணி உத்தரவு இன்று (18-05–2017) கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது.