சித்திரைக்கு முன்பே கீழக்கரையில் சீரியசாகும் குடிநீர் பிரச்சினை…

கீழ்க்கரையில் குடிநீர் பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு தொடர் கதைதான்.  கீழக்கரை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் தனியார் லாரி மற்றும் மாட்டு வண்டியில் வரும் தண்ணீரை நம்பிதான் உள்ளார்கள். கீழக்கரையில் பொதுவாக தனியார் வாகனங்களான சுகன்யா, பிஸ்மி, MSP, போன்ற நிறுவனம் மூலமாகவே தண்ணீர் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மாட்டு வண்டியைத் தவிர வேறு எந்த தனியார் நிறுவனங்களும் தண்ணீர் ஊருக்குள் கொண்டு வரவில்லை, ஆகையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  இது சம்பந்தமாக லாரி உரிமையாளர்களிடம் விசாரித்த பொழுது சமீப காலங்களில் தண்ணீரில் கலக்கப்படும் க்ளோரின் எனும் கிருமி நாசினி திரவம் ஒரு முறையில்லாமல் நகராட்சி நிர்வாகத்தால் அதிகமாக கலக்கப்படுகிறது.  அதனால் பொதுமக்கள் பால் திரண்டு விடுவதாகவும் மற்றும் குழந்தைகள் வாந்தி எடுக்கும் நிலைக்கும் ஆளாகிறார்கள்.  இதனால் பொதுமக்கள் மத்தியில் நாங்கள் இன்னலுக்கு உள்ளாகிறோம்.  இதை நகராட்சி நிர்வாகம் முறைப்படுத்தி பொதுகமக்களிடம் தெளிவுபடுத்தும் வரை ஊருக்குள் தண்ணீர் கொண்டு செல்வது சிரமம் என்ற கருத்தை முன் வைத்ததார்கள்.

நகராட்சி நிர்வாகம் லாரி உரிமையாளர்களின் கருத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து மக்கள் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா??

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image