Home செய்திகள் திருமங்கலத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – ஆடல், பாடலுடன் , தந்தை பாசம் குறித்த விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தன.

திருமங்கலத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – ஆடல், பாடலுடன் , தந்தை பாசம் குறித்த விழிப்புணர்வு நாடகம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தன.

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள விசுவாச வார்த்தை சபை ஆலயத்தில், கிறிஸ்துமஸ் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடிவரும் கிறிஸ்தவர்களின் பண்டிகைக்கு முன்னதாக, திருமங்கலத்தில் உள்ள விசுவாச வார்த்தை சபை பேராலயத்தில் , இன்று காலை முதல் கிறிஸ்துவ மக்கள் குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து , ஆலயத்தில் நடைபெற்ற விழாக்களில் பங்கு பெற்று, தங்களது பிள்ளைகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில், ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன், தந்தை பாசம் குறித்த விழிப்புணர்வு நாடகத்தையும் நடத்தினர்.இதனை கண்ட பெற்றோர்களும், பார்வையாளர்களும் கைதட்டி அவர்களை வெகுவாக பாராட்டியது அனைவரையும் நெகிழச் செய்தது..

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com