கற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….

இன்றைய நவீன உலகில் எத்தனையோ வாசிப்பு முறைகள் வந்து விட்டாலும், கையில் புத்தகத்தை வைத்து படித்து இன்புறுவதற்கு இணை எதுவுமே கிடையாது. “கற்போம் கற்பிப்போம்”, படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம், புதிய தலைமுறையை மதி கூர் கொண்ட தலைமுறையாக மாற்றுவது நம் அனைவருடைய கடமையாகும்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கம் வகையில் ஒவ்வொரு வருடமும் உலக புத்தக தினம் United Nations Educational Scientific & Cultural Organisation என்ற அமைப்பு மூலமாக வருடத்தில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த உலகப் புத்தக தினத்தின் நோக்கம் வாசித்தல், வெளியீடு மற்றும் காப்புரிமை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மற்றும் இளைய சமுதாயத்தின் மத்தியில் பரப்புவது ஆகும்.

இந்த உலக புத்தக தினத்தை முன்னிட்டு பல நாடுகளில் பள்ளிக் குழந்தைகள் பயன் பெறும் விதத்தில் இலவச புத்தகங்கள், விலைமதிப்பில்லாத புத்தகங்களை குறைந்த விலையில் மாணவர்களுக்கு அளித்தல், புத்தக கண்காட்சி,  மாணவர்களுக்கான எழுத்துப் போட்டிகள் என பல வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.

சிந்திக்கும் சமுதாயமே சிறந்த சமுதயம் மேன்மையாக சிந்திக்க படிப்பறிவு மிகவும் அவசியம்.. புதிய தலைமுறையை படிப்பறிவுள்ள சிந்திக்கும் தலைமுறையாக மாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கம் உண்டு…