Home செய்திகள் உலக சாதனை புரிந்த இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரி மாணவிகள்.. வில் மெடல்ஸ் அமைப்பு அங்கீகாரம்..

உலக சாதனை புரிந்த இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரி மாணவிகள்.. வில் மெடல்ஸ் அமைப்பு அங்கீகாரம்..

by ஆசிரியர்

சாதனைகள் புரிவது பல விதம், அதிலும் தனித்தன்மையுடன் சாதனை புரிவது மிகவும் கடினமான விசயமாகும்.  அவ்வரிசையில் இராமநாதபுரம் தஸ்தகீர் கல்லூரியைச் சார்ந்த மாணவிகள் த.மோனிஷா மற்றும் ரா.மித்ரா என்ற இரு மாணவிகள் இணைந்து காகிதத்தால் பல வண்ணங்களில் 3000 வகையான வடிவங்களை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.   இச்சாதனைக்காக கடந்த20/112018 முதல் 11/01/2019 வரை கடும் முயற்சியுடன் 26/012019 அன்று இச்சாதனையை நிறைவேற்றியுள்ளனர். இவர்களுடைய சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் வண்ணம் வில் மெடல்ஸ் நிறுவனம், அம்மாணவிகளுக்கு அங்கீகார பத்திரம் வழங்கினர்.

இச்சாதனையை பற்றி அம்மாணவிகள் கூறிய பொழுது, ‘இச்சாதனையை புரிய நாங்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆயத்த பணிகளை செய்து வந்தோம்.  இதற்கான முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும், வழி காட்டுதலையும் வில் மெடல் நிர்வாகிகளான கலைவாணி, தஹ்மிதா பானு மற்றும் அஃப்ரின் வஜிஹா ஆகியோர் சிறப்பாக செய்தனர்.

மேலும் இத்தருணத்தில் எங்களுக்கு பொருளாதாரம் மட்டுமல்லாமல் அனைத்து வகையான உதவிகளையும் செய்த பேராசிரியர் டாக்டர்.கார்த்திகேயன், வங்கி மேலாளர் கார்த்திகேயன், கீழக்கரை கிளாசிஃபைடு எஸ்.கே.வி.ஜெய்னுலாப்தீன் மற்றும் ரோட்டரி ஹால் உறுப்பினர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என சாதனை மாணவிகள் தெரிவித்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!