Home செய்திகள்கீழக்கரை செய்திகள் வில் மெடல்ஸ் உலக சாதனை, தேசிய சாதனை, மாநில சாதனை, முகவை ரெக்கார்ட்ஸ் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கும் விழா…

வில் மெடல்ஸ் உலக சாதனை, தேசிய சாதனை, மாநில சாதனை, முகவை ரெக்கார்ட்ஸ் அங்கீகாரச் சான்றிதழ் வழங்கும் விழா…

by ஆசிரியர்

4.4.2019 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள முகமது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் வில் மெடல்ஸ் சாதனைச்சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சோமசுந்தரம் தலைமை ஏற்றார். கவிஞர் மற்றும் தேவிப்பட்டினம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின்  தலைமை ஆசிரியருமான பா.தீனதயாளன் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.

இந்த நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த வெங்கடேஷ் – வைஷ்ணவி தம்பதிகளின் மகன் சிறுவன் ஹஷ்வ பிரணவ் இரண்டு வயதிலேயே 50க்கும் மேற்பட்ட கடினமான யோகாசனங்களை செய்து காட்டிய மைக்காக வில் மெடல்ஸ் உலக சாதனை, தேசிய சாதனை, மாநில சாதனை அங்கீகாரத்தைப் பெற்றார் .

தமிழகத்தின் முதல் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் வினாத் பாபு தனக்கான அங்கீகாரத்தை வில் மாநில சாதனை மற்றும் முகவை சாதனையில் பெற்றுக்கொண்டார்.

சித்தார்கோட்டை சேர்ந்த செல்வி பாத்திமா ஸஹ்ரா 2050 உலக நாடுகளின் கலை மற்றும் பண்பாட்டை எடுத்துச் செல்லக்கூடிய பென்சில் ஓவியங்களை வரைந்தமைக்காக வில் மெடல்ஸ் உலக சாதனை அங்கீகாரம் பெற்றார்.

இவர்களுக்கு இந்த சான்றிதழை சாதனை ஆய்வு மையத்தின் நிறுவனர் – தலைவர் Dr.ஆ.கலைவாணி,  நிறுவனத்தின் முதன்மை செயலாளர் Dr.சீ.தஹ்மிதா பானு,  சரி பார்ப்பு அலுவலர் மு.அஃப்ரின் வஜிஹா சிறப்பு ஆலோசகர் எஸ்.கே.வி.ஷேக் ஜெய்னுலாபுதீன், ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரியாஸ்தீன் ஆகியோர்  திறனை ஆய்வு செய்து சாதனை அங்கீகாரம் வழங்கினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் கவிஞர் பா.தீனதயாளன் இன்னும் பல சாதனையாளர்களை வில் மெடல்ஸ் நிறுவனமானது தொடர்ந்து உருவாக  செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று உரையாற்றினார். தனக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்களை எப்பொழுதும் துணிவோடு தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும் அப்போதுதான் தன் திறமைக்கான அங்கீகாரம் சமுதாயத்தில் கிடைக்கும் எனவும் சிறப்புரையாற்றினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!