Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கோவில்பட்டி தந்தை மகன் மர்மமான முறையில் உயிரிழந்ததை கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வெல்ஃபேர் கட்சி வலியுறுத்தல்.

கோவில்பட்டி தந்தை மகன் மர்மமான முறையில் உயிரிழந்ததை கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வெல்ஃபேர் கட்சி வலியுறுத்தல்.

by muzammil ibrahim

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையத்திற்கு வெல்ஃபேர் கட்சியின் மாநில செயலாளர் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்

ம.முகமது கவுஸ் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் கூறியுள்ளது.

பெறுநர்.

மாண்புமிகு மாநில மனித உரிமை ஆணையர் அவர்கள், மாநில மனித உரிமை ஆணையம், தமிழ்நாடு.

பொருள்:கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பந்தமாக.

ஐயா.,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் சாத்தான் குலத்தை சேர்ந்த ஜெயராஜ் (59) மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தது சம்மந்தமாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு மனித உரிமை ஆணையத்தின் சார்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு இருப்பதாக தொலைக்காட்சி செய்திகளின் மூலம் அறிய முடிந்தது, மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து. இந்த விஷயத்தை அணுகியதற்கு நன்றிகள்.

ஆனால் உயிரிழந்த ஜெயராஜ் அவர்களின் மனைவி செல்வராணி அவர்கள் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் அவர்களுக்கு 23.06.2020 தேதியிட்ட கடிதத்தில் தனது கணவர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் இந்த குற்றச்சாட்டை மாண்புமிகு மனித உரிமை ஆணையர் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மக்கள் உயிர் வாழ்வதற்கு போராடிக்கொண்டிருக்கக் கூடிய நிலையில் காவல்துறையினர் உடைய அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன இதற்கு மாநில மனித உரிமை ஆணையம் முடிவு கட்ட வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைக்கு காரணமான காவல்துறையினர் மீது இந்திய தண்டனை சட்டம் 159,166,300,302,322 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

அதிகார துஷ்பிரயோகத்தாள் சாதாரண மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கான நம்பிக்கை அளிக்கும் இடமாக திகழ்வது மனித உரிமை ஆணையம் மட்டுமே ஆகவே தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டையும் ஆணையம் பெற்றுத் தர வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி. ம.முகமது கவுஸ் மாநில செயலாளர், வெல்ஃபேர் கட்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!