Home செய்திகள்கீழக்கரை செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி …

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி …

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி Jun 17, 2020 அன்று “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு” இணையவழி கருத்தரங்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  அனைவரும் பாதுகாப்புக்கருதி, தனித்தனியாக இருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பிரிந்திருக்கும் அனைவரையும் ஒன்றிணைக்கும் பாலமாக இணையவழி கருத்தரங்கம் என்ற ஒன்றை கையில் எடுத்துள்ளது. IQACயின்சார்பாக 15/05/20″Gateway to Success”என்ற தலைப்பில் ,தம் கல்லூரி மாணவிகளுக்காக இணையவழி கருத்தரங்கை நடத்தியது.

ஆங்கிலத்துறை 30/05/20″The Key to Effective Communication” என்ற தலைப்பிலும், கணினி அறிவியல்துறை 03/06/20 “Content Creation Using Presentation Tube and Tools “என்ற தலைப்பிலும், கணிதத்துறை 04/06/20 “Recent Trends in Mathematics and Its Applications” என்ற தலைப்பிலும், வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியியல்துறை 11/06/20″The Role of Technology for Commerce “என்ற தலைப்பிலும் இந்தியா முழுவதற்கும்மான பொதுவானப் பல இணையவழிக் கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது.

அதனைத்தொடர்ந்து தமிழ்த்துறையின் சார்பில் “தனித்திரு தன்னம்பிக்கையுடன் இரு”என்னும் தலைப்பில் 17/06/20 அன்று காலை 11மணியளவில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. அரபித்துறைத் தலைவர் M. ரெய்ஹானத்தில் அதவியா அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் முகம்மது சதக் நிறுவனச் செயலாளர் S. M. H. சர்மிளா ‘கல்வி கற்றால்தான் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும் ‘என்று எடுத்துக்கூறி தலைமையுரை ஆற்றினார். அவரை தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிராபானு கமால்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுக்குப்பாராட்டுக்களை வழங்கி இக்கருத்தரங்கினைத் தொடங்கி வைத்தார்.

அனைவரையும் வரவேற்கும் விதமாக தமிழ்த்துறை தலைவர் Dr. H.பாத்திமா  வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு பேச்சாளர் Dr.மு. முத்துமாறன் உதவிப்பேராசிரியர், தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி, பெரம்பலூர் அவர்கள் “எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடக்கூடாது . பயத்தை போக்க மனதை ஒருநிலைபடுத்த வேண்டும். வலியை உணர்ந்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் ” போன்ற தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துக்கூறியதுடன் , பங்கேற்பாளர்கள் கேட்கும் வினாக்களுக்குப் பதிலளித்தும் சிறப்புரையாற்றினார். இறுதியாக நூலகத்துறைத் தலைவர் Dr. V. கீதா தேவி நன்றியுரை வழங்கியதுடன் இக்கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!