Home செய்திகள் அகில உலக நுகர்வோர் தினவிழா மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு விழா

அகில உலக நுகர்வோர் தினவிழா மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு விழா

by mohan

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அகில உலக நுகர்வோர் தினவிழா மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு விழா.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன், பெட்காட்; இந்தியா இணைந்து அகில உலக நுகர்வோர் தினவிழா மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நேற்று (23.07.2019) நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி உலக நுகர்வோர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நுகர்வோர்கள் தங்களது உரிமைகள் குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டத்தில் பல்வேறு விதிமுறைகள் நுகர்வோர்களுக்கு தெரிவிக்கப்பட்டள்ளது. தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நுகர்வோர்கள் ஒரு பொருள் வாங்கும்போது அந்த பொருளின் உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை நன்றாக பார்த்து வாங்க வேண்டும்..பொருட்களில் தரம் குறைவாக இருந்தால் நுகர்வோர்கள் கேட்க உரிமை உள்ளது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தரமான உணவுகள் மற்றும் தரமற்ற உணவுகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வந்தால் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிக்கு 2019 ஜனவரி 1 முதல் தடை விதித்தார். ஆகவே கடைகளில் நெகிழி பயன்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மழைநீர் சேகரிப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், நமது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள குளம், குட்டை, கண்மாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.இன்றைய கால கட்டத்தில் போட்டிகள் அதிகம் உள்ளதால் பொது அறிவு, அன்றாட நாட்டு நடப்பு நன்றாக தெரிந்துகொண்டு தங்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தனப்பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் அலுவலர் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அமுதா, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.வைஸ்லின் ஜிஜி, திருச்செந்தூர் வட்டாட்சியர் தில்லைப்பாண்டி, சென்னை பெட்காட் சேர்மன் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!