Home செய்திகள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு..

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் தென்காசி மாவட்டத்தில் ஆய்வு..

by ஆசிரியர்

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் க. அன்பழகன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் முன்னிலையில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் செ. ராஜேஷ்குமார், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்ல ஆகியோர் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினருடன் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினர் ஆலங்குளம் வட்டம் அடைக்கலப்பட்டினத்தில் T.D.T.A துாய பவுல் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் திரைப்படங்கள் மூலமாக மாணவர்களுடைய தனித்திறன் வளர்க்கும் பயிற்சியினை பார்வையிட்டு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்கள்.

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 76,236 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடத்தை பார்வையிட்டனர். இக்கட்டிடத்தில் தரைத்தளத்தில் பதிவு செய்யும் அறை, மருந்தகம், பேறுகால முன்கவனிப்பு பகுதி, பேறுகால பின் கவனிப்பு பகுதி, காத்திருக்கும் அறை, அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் பார்க்கும் இடம், மருத்துவ அலுவலர் அறை, மருந்து கட்டும் அறை, கழிப்பறை, யோக மற்றும் சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட வசதிகளுடனும், முதல் தளத்தில் நோயாளி தயார் செய்யும் இடம், தொற்று பிரசவ வார்டு, பேறுகால அறை, பேறுகால பின் கவனிப்பு வார்டு, தீவிரச் சிகிச்சை பகுதி, அவசர வெளிநோயாளிகள் பகுதி, செவிலியர் அறை, சுத்தப்படுத்தப்பட்ட துணி துவைக்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியல் அறை, உள்ளிட்ட வசதிகளுடனும், இரண்டாம் தளத்தில் நோயாளி தயார் செய்யும் இடம், அறுவை சிகிச்சை அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பகுதி, உடைமாற்றும் அறை, செவிலியர் அறை, சுத்தப்படுத்தப்பட்ட துணி வைக்கும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளுடனும், மூன்றாம் தளத்தில் குடும்ப கட்டுப்பாடு வார்டு, பணி செவிலியர் அறை, பிரசவ அறுவை சிகிச்சை வார்டு-1, பிரவச அறுவை சிகிச்சை வார்டு-2, முதலமைச்சரின் காப்பீடு வார்டு, செவிலியர் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளுடனும், நான்காம் தளத்தில் பிரவச அறுவை சிகிச்சை வார்டு-1, பச்சிளம் குழுந்தை தீவிர சிகிச்சை பகுதி-1, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பகுதி-2, முதலமைச்சரின் காப்பீடு வார்டு, தாய்ப்பால் ஊட்டும் அறை, கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன், ஐந்தாம் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அறை, கூட்ட அரங்கம், ஓய்வு அரங்கம், கழிப்பறை மற்றும் குளியலறை உள்ளிட்ட வசதிகளுடனும், பொதுவான வசதிகளாக பொதுமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்றோர் மருத்துவமனையின் அனைத்து பகுதிக்கும் எளிதில் செல்வதற்று ஏதுவாக சாய்வு தள வசதியும் மின்தூக்கிகள் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. மருத்துவர்கள், பெண்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் என தனித்தனியாக கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கிழ் பயனடைந்த குஷி நைட்ஸ் அன்ட் கார்மெனட்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டனர். வல்லத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் ரூ.48.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தக கட்டிடத்தை பார்வையிட்டனர். இந்த கால்நடை மருந்தகத்தின் மூலம் சுமைதீர்ந்தபுரம், பிரானுார், பாட்டபத்து, வல்லம் உள்ளிட்ட கிராமங்கள் பயனடையும். இக்கால்நடை மருந்தகத்தின் சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், கன்று பிறப்பு, குடற்புழு நீக்கம், கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி, கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி, வெறிநோய் தடுப்பூசி அளிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு கால்நடை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களுக்கு குறிப்பாக 1 முதல் 8 வது வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் “இல்லம் தேடி கல்வித் திட்டம்” ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டகூறின் செயல்பாட்டினை ஆய்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் சட்டமன்ற மதிப்பிட்டு குழுவினர் செங்கோட்டை ஒன்றியம், சீவகநல்லுார், அரசு தொடக்கப் பள்ளியில் நடைப்பெற்று வரும் “இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆய்வுக் குழுவினர் மாணவர்களிடம் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறப்பாக பதிலுரைத்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, இணை இயக்குநர் (சுகாதரப் பணிகள்) பிரேமலதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், மாவட்ட தொழில் மைய மேலாளர் மாரியம்மாள், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (கால்நடைத் துறை) மரு.தியோபிலஸ் ரோஜர், உதவி இயக்குநர் (கால்நடைத் துறை) மகேஷ்வரி, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி மற்றும் வட்டாட்சியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!