காடுபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் போசான் அபியான் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உணவுத்திருவிழா நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதத்தில்அரசு சார்பில் அனைத்து அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து உணவுதிருவிழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே உள்ள காடுபட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து உணவுத்திருவிழா நடைபெற்றது. இதில் காடுபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமை வகித்தார்.

இதில் சிடிபோ திருமகள், மேற்பார்வையாளர் செல்வி மற்றும் பிசி சங்கர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். அதனைதொடர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் கண்காட்சிக்காக காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்கள் வைத்து காய்கறிகள், உணவுகள் சாப்பிடுவதன் அவசியம், எந்தெந்த காய்கறிகளால் என்னென்ன ஊட்டச்சத்துகள் உள்ளது குறித்து குழந்தைகளுக்கு விளக்கமளித்தனர். மேலும் இதில் கலந்துகொண்ட பாலூட்டும் தாய்மார்கள், வளர்இளம்பெண்கள், கர்பிணி பெண்கள் காய்கறிகள் சாப்பிடுவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பாசமலர் முக்கிய பங்காக தெய்வராணி,மகேஸ்வரி மற்றும் உதவி பணியாளர்கள் அமுதா,மஞ்சு, அனுராதா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா