அன்னம்பார்பட்டியில் குறிசொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் பொதுமக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு அரசியல் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட அன்னம்பார்பட்டியில் குறி சொல்லும் மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரானா ஊரடங்கு உத்தரவால் குறி செல்லும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டியிடம் குறி சொல்லும் மக்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்டு குறி சொல்லும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார். இதனையடுத்து சீமானுத்து பஞ்சாயத்து தலைவர் அஜித்பாண்டி தனது சொந்த செலவில் குறி சொல்லும் பொது மக்களுக்கு அரிசி, பருப்பு,காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினார். இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு, மூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்கள் வழங்கி சென்றனர்.கொரோணா ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வந்த நிலையில் நிவாரணம் வழங்கியவர்களுக்கு குறி சொல்லும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

உதவிக்கரம் நீட்டுங்கள்..