Home செய்திகள் பேரையூர் அருகே கிமு 5 ஆம் நூற்றாண்டின் இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேரையூர் அருகே கிமு 5 ஆம் நூற்றாண்டின் இரும்பு உலை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஆபரணங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

by mohan

மதுரை மாவட்டம் பேரையூர் பேரையூர் அருகே சூலப்புரம் உலைப்பட்டி கிராமத்தின் மலையடிவாரப் பகுதியில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் இரும்பு உலை கண்டறியப்பட்டது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமச்சடங்கு செய்தமைக்கான அடையாளங்களும், ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற ஈமச்சடங்குகளின் வடிவங்களாக முதுமக்கள் தாழி, வட்டக்கல், நடுகல், தட்டுக்கல் போன்றவை இப்பகுதியில் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பகுதியில் விவசாயம் செய்ய நிலத்தை பண்படுத்தும் போது கிடைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் கிடைக்கப்பட்ட பல்வேறு வடிவிலான பானைகள், மீன் வடிவிலான சின்னங்கள், வளையல்கள், எலும்பு குவியல்கள் மற்றும் பலவகையான பாசிவகைகளை கண்டறிந்த விவசாயி வருவாய்த்துறைக்கு தகவல் அளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் ஆய்வு செய்த பேரையூர் வட்டாச்சியர் சாந்தி தலைமையிலான குழுவினர் விவசாயிடமிருந்து பழங்கால பொருட்களை மீட்டு வட்டாச்சியர் அலுவலத்தில் பத்திரப்படுத்தியுள்ளனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!