உசிலம்பட்டியில் பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிறந்தகுழந்தையுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் எழுமலை அருகே எமம்.கல்லுப்பபட்டியைச் சேர்நத விவசாயக்கூலி வேலை செய்யும் 31 வயது பெண் (முத்துச்செல்வி) பிரசவத்திற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மாலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பிரசவித்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மாலை 6 மணியளவில் பிரசவ வலி ஏற்ப்பட்டு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.பிரசவித்த சிறிது நேரத்தில் கொரோனா தொற்று எனத்தகவல் வர பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தையுடன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இதனைத் தொடா்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

உசிலை சிந்தனியா