Home செய்திகள் உசிலம்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மதியமே சரக்கு விற்றுத் தீர்ந்ததால் மதுப்பிரியர்கள் கடை முன் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

உசிலம்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மதியமே சரக்கு விற்றுத் தீர்ந்ததால் மதுப்பிரியர்கள் கடை முன் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.

by mohan

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறாத நிலையில் கடந்த வாரம் முதல் ஊரடங்கில் தளர்வை ஏற்படுத்தியது தமிழக அரசு.இந்நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி திறந்தது.இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள கிராமப் பகுதிகளில் காலை முதலே டாஸ்மாக்கில் கூட்டம் அலைமோதியது.பெரும்பாலான குடிமகன்கள் முகக்கவசம் அணியா விட்டாலும் அனைவரும் சமூக இடைவெளிவிட்டு பொறுமையுடன் வரிசையில் நின்று சரக்கு வாங்கிச் சென்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கருமாத்தூர் உள்பட சில டாஸ்மாக் கடைகளில் மதியமே சரக்கு விற்றுத்தீர்ந்ததால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இருந்த பொழுதிலும் சரக்கு வந்து கொண்டிருக்கிறது என டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறியதால் வெறுங்கையுடன் வீட்டிற்குச் செல்ல மனமின்றி டாஸ்மாக் கடை முன் வெயிலில் காத்துக் கிடக்கின்றனர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!