வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக இருக்கும் போது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உசிலம்பட்டி பகுதியிலுள்ள 35 கண்மாய்கள் பாசன வசதி பெறும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த டிசம்பர் 13 அன்று வைகை 58 கிராமகால்வாயில் நீர் திறக்கப்பட்டு உசிலம்பட்டிப்பகுதியிலுள்ள கண்மாய்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.தற்போது 15க்கும் மேற்பட்ட கண்மாய்களை நீர் சென்றடைந்த நிலையில் சிலர் சங்கத்தின் பெயரை உபயோகப்படுத்தி கண்மாய் பாதுகாப்புக்குழு என்ற பெயரில் கிராமமக்கள்ளிடம் பணவசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்ந சூழலில் 5ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய கண்மாய்களுக்கெல்லாம் பணம் பெற்றுக் கொண்டு கூடுதல் நாட்கள் தண்ணீர் திறந்து விட்டதாகவும் 18ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்கட்டாண்பட்டி கண்மாய்க்கு 3 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளதை அறிந்த கருக்கட்டாண்பட்டி கிராம மக்கள்; 58 தங்கள் கண்மாய்க்கு கூடுதல் நாள் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சம்பவமறிந்த பொதுப்பணித்துறையினர் அவர்களிடம் அலட்சியமாக பதிலளித்தால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.பின்னர் கிராமமக்கள் கலைந்து சென்றனர்.இந்நிகழ்ச்சியில் கிராம இளைஞர் குழுவைச் ;சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்றனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.