இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து விளக்கம் அளித்தார். ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான முனைவர் ராம்குமார் மற்றும் பூச்சியியல் துறை பேராசிரியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னையை தாக்கும் கருந்தலைப்புழு , சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு , தென்னை சுருள் வெள்ளை ஈ மற்றும் தென்னையை தாக்கும் நோய்களான தஞ்சாவூர் வாடல் நோய், குருத்து அழுகல் நோய் போன்றவற்றை கண்டறியும் முறைகள் மற்றும் நிர்வாகம் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்க உரையாற்றினர். ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய அலுவலர் முனைவர் ஜெகதீசன் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு பற்றியும் விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் உரப் பரிந்துரை குறித்தும் விளக்கி பேசினார் அம்பேத்குமார் மூத்த வேளாண் அலுவலர் ராமநாதபுரம் உயிர் உரங்களின் பயன்பாடு அதனை உபயோகப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கிப் பேசினார். கலைவாணி வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) உச்சிப்புளி உழவர் கடன் அட்டை விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்கம் மையம் உச்சிப்புளி தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் , சீதாலட்சுமி வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம், பாண்டியம்மாள் தோட்டக்கலை அலுவலர் தென்னை நாற்று பண்ணை, உச்சிப்புளி, தங்கவேல் துணை தோட்டக்கலை அலுவலர், உச்சிப்புளி அக்ரி இன்சூரன்ஸ் கம்பெனி ,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் , பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ,உச்சிப்புளிஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.
62
You must be logged in to post a comment.