Home செய்திகள் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா

by mohan

நினைக்க முக்தி தரும் திருத்தலமான அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் திருகார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.அண்ணாமலையார் திருக்கோவிலில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 10ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்..

இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திரு குடைகள் தயாரிக்கும் நடைபெறுகிறது.அதனைத்தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி முதல் நாள் திருவிழா.இரவில் நடைபெறும் தீபதிருவிழாவிற்காக நான்கு மாடவீதிகளில் வலம் வர இருக்கும் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் வரும் அண்ணாமலையாருக்கும் வெள்ளி அன்னப்பட்சி வாகனத்தில் வரும் அம்பாளுக்கும் பிரம்மாண்டமான பூ சக்கர குடைகள் தயாரிக்கும் பணியில் அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் உத்தரவின்பேரில் கோவில் மிராசு விஜயகுமார் மேற்பார்வையில் சென்னையை சேர்ந்த பிரபல திருக்கோயில் குடை தயாரிப்பாளர் கஜேந்திரஷா & பிரதர்ஸ் குழுவினர்கள் 17 ஜான் குடை, 15 ஜான் குடை ,13 ஜான் குடை ,அளவு கொண்ட பிரம்மாண்ட குடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள் .

திருகார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பாரம்பரியமாக நயமிக்க அதிக வேலைப்பாடுகள் கொண்ட சாமி குடைகள் தயாரித்து அண்ணாமலையார் கோவிலுக்கு கொடுப்பது வழக்கம் அதிகார நந்தி வாகனத்தில் வரும் அண்ணாமலையாருக்கு போடப்படும் குடை 13 அடி உயரமும் 13 மீட்டர் வட்டமும் ஜொலிக்கும் பொன்னிறத்தில் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது இப்பணியில் தீபத் திருவிழாவின்போது அனைத்து நாட்களிலும் அண்ணாமலையார் மற்றும் அனைத்துச் சாமிகளை சுமக்கும் சிவனடியார்கள் இந்த பணியில் ஆத்மார்த்தமாக சிவ தொண்டு செய்து வருகின்றார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!