Home செய்திகள் பாரம்பரிய கலாச்சார திருவிழா மற்றும் திறமை தேர்வு 2020ல் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் பரிசுகள் குவிப்பு.

பாரம்பரிய கலாச்சார திருவிழா மற்றும் திறமை தேர்வு 2020ல் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி மாணவர்கள் பரிசுகள் குவிப்பு.

by mohan

நேரு யுவகேந்திரா நாமக்கல் மாவட்டம் (இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம்) மற்றும் நாமக்கல் பாரதமாதா சிலம்பம் பயிற்சி மன்றம் இணைந்து மாவட்ட அளவிலா பாரம்பரிய கலாச்சார திருவிழா மற்றும் திறமை தேர்வு 2020ஐ ஸ்பெக்ரம் அகாடமி பள்ளி, நாமக்கலில் நடத்தியது. 900க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரியை சார்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.இதில் சிலம்பம், யோகா, பாரதம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்ற கலாச்சார போட்டிகள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் மகாராஜ் தலைமையுரை ஆற்றினார். இதில் மாணவர்கள் வெற்றிப்பெற ஒரு நாள் ஒன்றுக்கு பதிமூன்று மணிநேரம் உழைக்க வேண்டும். அனைவரும் மருத்துவர் மற்றும் பொறியாளார் ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்காது. விளையாட்டில் சிறந்து மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரி போன்று வர வேண்டும். வாழ்க்கையில் சரியான இலக்கு இருக்க வேண்டும். நமது இலக்கை சென்று அடையும் வரை நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்று பேசினார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.

ஸ்பெக்ரம் பள்ளி தாளாளர் விக்னேஷ் அனைவரைரும் வாழ்த்தினார்.இந்த போட்டியில் நேரு நினைவு கல்லூரியை சார்ந்த ஆறு மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். சிலம்பம் போட்டியில் மூன்றாமாண்டு இயற்பியல் மாணவி சக்திப்ரியா முதல் பரிசும், முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவன் பூபாலன் முதல் பரிசும், இரண்டாம்மாண்டு இயற்பியல் மாணவி ரேணுகாதேவி இரண்டாம் பரிசும், இரண்டாம்மாண்டு கணினி பயண்பாட்டு அறிவியல் மாணவன் குபேரன் இரண்டாம் பரிசும்,மூன்றாமாண்டு கணிதவியல் மாணவன் பழனிவாசன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.யோகா போட்டியில் மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி தனப்பிரியா முதல் பரிசு பெற்றார்.முன்னாதாக கல்லூரி முதல்வர் முனைவர் பொன்பெரியசாமி, நிர்வாகக் குழுத்தலைவர் பொன்.பாலசுப்பிரமணியசெயலர் பொன் ரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் மாணவர்களை ஊக்குவித்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.தாவரவியல் துறையை சார்ந்த உதவி பேராசிரியர் முனைவர் ப.மனோகரன் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கினார். இயற்பியல் துறையை சார்ந்த உதவி பேராசிரியர் இரமேஷ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்.

செய்தி: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!